நாட்டில் நேற்றைய தினம் 409 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 11,744 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 409 புதிய கொரோனா நோயாளர்களில் 401 நபர்கள் மினுவாங்கொடை – பேலியாகொட கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஏனைய எட்டுப் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.
தற்போது மினுவாங்கொடை-பேலியாகொட கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 8,266 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 332 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 5,581 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் இரு வெளிநாட்டினர் உட்பட 6,140 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 430 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
நேற்று கொரோனா தொற்றினால் 22 மற்றும் 23 ஆவது உயிரிழப்பு சம்பவங்களும் நாட்டில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.