மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரின் 3 வயது மகன் 200 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

பொலிஸாருக்கும், தீயனைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், குறித்த குழந்தையை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாக நிவாரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். தண்ணீர் அந்த கிணற்றில் 100 அடிக்கு கீழ் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply