நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பதிவான 443 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி பொரளையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியிலிருந்து 138 பேரும் கொழும்பு வடக்கிலிருந்து 21 பேரும் கொழும்பு துறைமுகத்திலிருந்து 11 பேரும் 42 பேர் கொழும்பில் வேறு பல இடங்களிலிருந்தும் கண்டறியப்பட்டனர்.
இதேநேரம் கம்பஹா மாவட்டத்திலிருந்து 62 பேரும் களுத்தறையிலிருந்து 20 பேரும் இரத்தினபுரியிலிருந்து 09 பேரும் புதிய கொரோனா நோயாளர்களுள் அடங்குகின்றனர்.
அதேபோல நுவரெலியாவிலிருந்து 06 பேரும் கண்டி மற்றும் மாத்தறையிலிருந்து தலா மூவரும் காலி மற்றும் குருணாகலில் இருந்து தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களுள் அடங்குகின்றனர்.
அது மாத்திரமன்றி தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 25 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஐந்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.