அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் குறைந்தபட்சம் 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற வேண்டும்.
அமெரிக்க ஊடகங்களின் உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகளின் பிரகாரம் ஜோ பைடன் 270 வாக்குகளைக் கடந்துள்ளார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜனாதிபதி ட்ரம்ப் இதுவரை 214 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தெரிவாகுதன் மூலம் உப ஜனாதிபதியாக கமலா ஹரீஸ் தெரிவாகியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் கமலா ஹரீஸ் என்பது குறிப்பிடத்கத்கது.
56 வயதான கமலா தேசி ஹரீஸ் தமிழகத்தில் பிறந்த jதமிழ் பெண்ணின் மகளாக அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
77 வயதான ஜோ பைடன் 2009 முதல் 2017 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.