யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க பட்டதோடு இறுதியில் முதல்வரினால் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலர் தவறான நடவடிக்கையில் ஈடு பட்டமைக்கான விசாரணைகள் தொடர்பில் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநகர ஆணையாளரால் பதிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply