கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதியில் இனம் தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்னும் 40 வயதுடைய நபர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வாங்கிகொண்டு மோட்டார் சைக்கிளில் தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்த வேளை இனந்தெரியாதவர்களால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.