நாட்டில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

1.கொழும்பு 10ஐ சேந்த 65 வயது ஆண், கொரோனா தொற்று காரணமாக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

2.இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

3.கிருலப்பன பிரதேசத்தை சேர்ந்த 71 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

4.கொழும்பு 10ஐ சேர்ந்த 81 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

5.தெமட்டகொடைபிரதேசத்தை சேர்ந்த 82 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்த உயிரிழப்பு 66 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 568ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்து 18 ஆயிரத்து 72ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 404 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 12 ஆயிரத்து 210 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 801 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Share.
Leave A Reply