நடிகை காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக செலவு செய்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார்.
அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.