கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் ஓட்டோவில் பயணித்த வேளை டிப்பருடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயதுச் சிறுமி
பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நந்தகுமார் நிதிலா என்னும் உதய நகர், கிளிநொச்சியைச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி கடந்த 8 ஆம் திகதி ஓட்டோவில் பெற்றோருடன் பயணித்த சமயம் வீதியைக் கடப்பதற்கு தயாராக நின்ற டிப்பரின் பின் பகுதியில் ஓட்டோ மோதியுள்ளது. இதன்போது ஓட்டோவின் ‘கரியர்’ கம்பி வளைந்து அதன் உள்ளிருந்த சிறுமியின் தலையைத் தாக்கியுள்ளது.
உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.