நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 74 ஆக உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இன்றையதினம் ஒரு கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு – 2 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தினமும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலைக்கு மத்தியில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் சகல பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லம்பிட்டிய – வென்னவத்தை முகாம் 14  நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

20 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் 435 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 19 280 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 5935 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு , 13 271 பேர் குணமடைந்துள்ளனர்.

சனிக்கிழமையயும் ஞாயிற்றுக்கிழமையும் பயணிகள் போக்குவரத்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இனினும் இவ்விரு நாட்களும் அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லம்பிட்டிய – வென்னவத்தை முகாம் மற்றும் திணைக்களத்தின் கீழ் கட்டுநாயக்கவில் இயங்கும் அலுவலகம் என்பன 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சாரதியாக பணியாற்றும் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் வென்னவத்தை முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், அங்கு சேவையாற்றும் சிவில் பாதுகாப்பு படையின் சிப்பாய்கள் 70 பேரையும் முகாமிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் அலுவலகத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால், அங்குள்ள 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply