கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், நேற்று (19) மட்டும், நால்வர் மரணமடைந்துள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.

கொழும்புக்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேர் மரணித்துள்ளனர்.

கொழும்பு 10 ஐச் ​சேர்ந்த 70 வயதான ஆணொருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 15ஐச் சேர்ந்த, 27 வயதான யுவதியும் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் ஏனைய மரணங்கள் இரண்டும் கொழும்புக்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

59 வயதான பெண்ணும், 86 வயதான ஆணுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply