யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே அயலவர்கள் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறிவீழ்ந்து நான்கு, ஆறு வயது கொண்ட சகோதரர்களான இரு ஆண் சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் தந்தையார் பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல் பகுதியில் அயலவர்கள் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்தபோது, அதிலிருந்த சேறும் சகதியிலும் சிக்கி மேற்படி அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகின்றது.

சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரபட்டுள்ளன. இந்தச் சிறுவர்களின் தாயார் அச்சுவேலி பகுதியில் மருத்துவ மாதுவாகப் பணியாற்றுகின்றார்.

Share.
Leave A Reply