பிரான்ஸில் நவம்பர் 28ம் திகதி வியாபார நிறுவனங்கள் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 திகதி செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன் பொழுது வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக நிறுவனங்களில் தொற்று நீக்கிகள் வாசலில் வைக்கப்பட்டிருப்பது கட்டாயப்படுத்தப்படும்.

சமூக இடைவெளி கோடுகள் வரையப்பட்டு இருக்க வேண்டும் .

பணம் செலுத்தும் இடங்களில் வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையில் பாதுகாப்பு கதவுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் tous anti-covid செயலியை எல்லோரும் பயன்படுத்துவதற்குஊக்குவித்தல் வேண்டும்.

இவை போன்ற கட்டுப்பாடுகள் உடனேயே வியாபார நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெறும் விஞ்ஞான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bretagne மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex “நாங்கள் கட்டுப்பாடுகளை மதித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடுமையாக இருந்தால் வரும் டிசம்பர் முதலாம் திகதி அளவில் வியாபாரத் தலங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று 24 மணி நேரத்தில் 386 பேர் பிரான்ஸ் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றினால் மரணமானதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 22882 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 41 ஆயிரத்து 265 பேர் covid-19 ஆரம்பித்த காலத்திலிருந்து நேற்று வரை பிரான்சில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply