தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தியவேளை பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

வரவுசெலலு திட்டத்தின் மீதான உரையை மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கஜேந்திரகுமார் ஆரம்பித்தார்.

முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரத்பொன்சேகாவை போர்க்குற்றவாளி என தெரிவித்தார்.

தன்னை போர்க்குற்றவாளி என தெரிவித்ததை சுட்டிக்காட்டி சரத்பொன்சேகா ஒழுங்குபிரச்சினையை எழுப்பினார்.

இதனை தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பயங்கரவாதி என குறிப்பிட்ட அவர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்தும் உரையாற்றினார்.

அவர்உரையாற்றியவேளை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறுக்கிட்டு கடும் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply