கொரோனாவினால் உயிரிழந்த தனது உறவினரின் உடல் புதைக்கப்பட்டது என்பதை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரியின் உறவினர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.

உயிரிழ்ந்தவரின் உடலை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது என தெரிவித்துள்ள ஹேசா விதானகே எனினும் அவரது உடல் புதைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

தனது உறவினர்களிற்காக நீதியமைச்சர் சட்டத்தினை வளைக்கின்றார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை நிராகரித்துள்ள நீதியமைச்சர் தனது தனிப்பட்ட நலனிற்காக சட்டத்தினை வளைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தான் தனது அமைச்சு பதவியையும் நாடாளுமன்ற பதவியையும் இராஜினாமா செய்ய தயார் என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்தால் கூட ஏனையவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டால் என்னுடைய உடலையும் தகனம் செய்யவேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply