வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது தற் போது நிவார் சூறாவளியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது தற்போதுகாங்கேசன்துறை கடற்பரப்பில் 325 கி.மீ தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளியாக உருவாகக் கூடும்.

அத்தோடு, அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் தமிழ்நாடு கடற் கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply