யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.
இதன் காரனமாக கரையோரங்களை அண்டிய சில பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசியதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் கடல் பகுதியில் கடும் காற்று வீசுவதனால் யாழ். மாவட்டத்தில் பல மீனவர்கள் தொழிலுக்கு சென்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிவர் புயல் கரையைக் கடக்கவுள்ளமையால், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், பலத்த மழை வீழ்ச்சியும் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.