அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இடம்பெயர்ந்த மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Share.
Leave A Reply