வீதியில் நடந்து சென்றவர் மீது மரம் வேரோடு சாய்ந்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

நிவர் புயலை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் புயல் காற்று வீசியது.

வீதியோரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அந்த நபர் மீது மரம் விழுந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

Share.
Leave A Reply