மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் குழப்ப நிலையும் வன்முறைகளும் தொடர்வதாகவும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50பேர் காயமடைந்துள்ளதை பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
சிறைச்சாலையில் வன்முறைகள் ஆரம்பமாகி 12 மணிநேரத்தின் பின்னரும் துப்பாக்கி பிரயோகத்தை கேட்க முடிவதாக அந்த பகுதியில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7.20க்கு துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மஹர சிறைச்சாலை முன் சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் திரண்டவேளை அவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் இருந்து அம்புலன்ஸ்கள் மருத்துவமனையை நோக்கி செல்வதை காணமுடிகின்றது.

