இலங்கையில் போர்க் குற்றங்களில் பிரித்தானிய கூலிப்படையினருக்குள்ள தொடர்புகள் குறித்து பிரிட்டனின் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland Yard) எனும் மெட்ரோபொலிட்டன் (Metropolitan Police ) பொலிஸார் விசாரணை நடத்துவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கீனி மீனி சேர்விசஸ் (Keenie Meenie Services (KMS) ) எனும் பிரித்தானிய தனியார் கூலிப்படையினர் 1980களில் இலங்கையில் நடந்த யுத்த்தின்போது இலங்கையின் விசேட அதிரப்படையிருக்கு பயிற்சிகளை அளித்திருந்தனர்.
இதன்போது போர்க் குற்றங்களில் கீனி மீனி கூலிப்படைனிர் தொடர்புபட்டிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புpரித்தானிய ஊடகவியலாளர் பில் மில்லர் (journalist Phil Miller) எழுதிய நூலொன்றில் இது குறித்து குறிப்பிட்டிருந்தார்.
புpரித்தானிய கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக 30 வருடங்களாக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் சில அண்மையில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போர்க் குற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

