அமெரிக்கா உட்டா பாலைவனத்தில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோகத் தூண் ஒன்று ரோமானியாவில் ஒரு மலைப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிலுள்ள உட்டா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக, கடந்த புதன் கிழமை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இச் செய்தியை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக வெளி உலகிற்கு தெரியாமல் வைக்க முயன்றது. ஆனால் அது பற்றி அறிந்த மக்கள்,பல கட்டுப்பாடுகளையும் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று குறித்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், புதன் கிழமை முளைத்த அந்த தூண் வெள்ளிக்கிழமையே அந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டது. அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே கிடந்தது.

அந்த தூணை அங்கே எழுப்பியது யார்?, மனிதர்களா இல்லை வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அது மாயமாக மறைந்தது பெரும் புதிராகவுள்ளது.

அதே சமயம், அந்த தூண் 2015, 2016 ஆம் ஆண்டுகளிலேயே, அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள் அதே மாதிரியான ஒரு உலோக தூண், ரோமானியா நாட்டில் திடீரென தோன்றியுள்ளது.இந்த தூணின் உயரம் 13 அடி. அமெரிக்க தூணை விட ஒரு அடி அதிகம்.

இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில் வீசினார்களா..? அல்லது யாராவது வேண்டுமென்றே பரப்பரப்பை தூண்டுவதற்கென்று இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தாலும், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.

அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அரசாங்கத்தின், கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply