மத்திய பிரதேச வனப்பகுதியில் நடத்தப்பட்டுவரும் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் தங்கி படப்பிடிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு உணவுக்கான அழைப்பு நிராகரிக்கப்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு அங்கு நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MP Minister Refutes Reports Claiming He Halted Vidya Balans Shoot

மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா இரவு உணவிற்கு வித்யா பாலனை அழைத்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும், இது நடந்து ஒரு நாள் கழித்து திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறி, பாலாகாட்டின் மாவட்ட வன அலுவலர் அணியின் வாகனங்கள் காட்டுக்குள் நுழைவதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

MP Minister Refutes Reports Claiming He Halted Vidya Balans Shoot

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் ஷா, தான்தான் இரவு உணவிற்கான கோரிக்கையை மறுத்ததாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி ANI-யிடம் விளக்கமளித்துள்ள அவர், “படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று சிலர் என்னை அழைத்ததால் தான் நான் பாலாகாட்டிற்கு சென்றேன்.

அவர்கள் என்னை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம், என்னால் இப்போது உணவில் கலந்துகொள்ள முடியாது எனவும், மகாராஷ்டிராவிற்கு செல்லும்போது அவர்களை சந்திப்பதாகவும் கூறினேன்.

ஆகையால் மதிய உணவு அல்லது இரவு உணவுதான் ரத்து செய்யப்பட்டது, படப்பிடிப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply