அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், கடந்த 24  மணிநேரத்தில் 225,201 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே நாளில் அதிக தொற்றாளர்களார்கள்  பதிவான முதல் முறையாகும்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் மொதம் 14,343,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை கொரோனா தொற்றினால் கடந்த 24  மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,506 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து உயிரிழப்புகளின எண்ணிக்கை 278,605 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் ரொபர்ட் ரெட்பீல்ட் கூறும் போது

பெப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால்  உயிரிழப்பு எண்ணிக்கை 450,000 எட்டும்இந்த குளிர்காலம்இந்த நாட்டின் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கடினமான நேரம்என்று அவர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.19 இலட்சத்தை கடந்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,519,050  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 65,925,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply