இந்தியாவின் ஆந்திரபிரதேசத்தில் இனந்தெரியாத நோயொன்றினால் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரபிரதேசத்தின் எலுறு நகரை தாக்கியுள்ள இனந்தெரியாத நோய்க்கு மூவர் பலியாகியுள்ளதுடன் 380 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பலர் மயக்கமடைதல் வாந்தி வலிப்பு போன்ற நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக சிறுவர்களும் குழந்தைகளும் கண்எரிவு வாந்தி போன்றவை குறித்து முறைப்பாடு செய்துள்ளனர் என மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நகரிற்கு விசேட மருத்துவ குழுக்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் குருதி மாதிரிகளில் வைரஸ் அறிகுறிகள் தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் அல்லது வாயுமாசடைவால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை இது இனந்தெரியாத மர்மநோய் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரபிரதேஸ் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே புதிய நோய்பரவல் ஆரம்பித்துள்ளது.

