மத்தியப் பிரதேச மத சுதந்திர சட்டம் – சிவராஜ் சிங் சௌகான் ஆலோசனை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இயற்ற திட்டமிடப்பட்டுள்ள ‘மத்தியப் பிரதேச மத சுதந்திர’ சட்டத்தின்கீழ் திருமணம் அல்லது வேறு முறைகேடான வழிகளில் மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவரை மதம் மாற்றும் நோக்கில் மட்டுமே செய்யப்படும் திருமணம் செல்லாது என்னும் விதியும் அந்தச் சட்டத்தில் இருக்கும் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் சனியன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் கலந்துகொண்ட அதிகாரியே மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

இந்து பெண்களை இஸ்லாமிய ஆண்கள் ஏமாற்றி திருமணம் செய்வதாக தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு ‘லவ் ஜிகாத்’ என்று பெயரிட்டு வழங்குகின்றனர் இந்து வலதுசாரிகள்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று சமீப காலமாகப் பேசி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் இத்தகைய சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது.

Share.
Leave A Reply