யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று எரிபொருள் தாங்கியின் பின்புறமாக மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களில் நான்கு வயதுடைய சிறுவனும் 35 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply