நடிகை நிஹாரிகாவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண பரிசுகளை நடிகர் சிரஞ்சீவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு. இவரது மகள் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் தொழில் அதிபர் வெங்கட சைதன்யா என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் திருமணம் செய்ய விரும்பினர். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.