வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது.

செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply