பிறந்த 20 நாளேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தது. அந்த குழந்தையின் உடலை, முஸ்லிம் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். உடலை தகனம் செய்ய மறுப்பு தெரிவித்தே உடலை ஏற்க மறுத்தனர்.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் குழந்தை இறந்தது.
பி.சி.ஆர் சோதனை குறித்து தங்களுக்கு கவலைகள் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர், ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக பெற்றோர் நேற்று (புதன்கிழமை) உடலை ஏற்க மறுத்துவிட்டனர்.
கொரோனாவால் உயிரிழந்து உரிமை கோரப்படாதவர்களின் சடலங்களை கொழும்பு மாநகரசபை நேற்று தகனம் செய்யத் தொடங்கியது. குழந்தையின் உடலும் நேற்று தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களினுடையவை. அவற்றை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்து உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்யலாம் என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்பு சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்திருந்தார்.