மட்டக்ளப்பு பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளின் கண்காணிப்புக்கு மத்தியிலும் இன்று சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி மட்டக்கள்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் போனவர்களினர் உறவுகளினால் கவனஈர்ப்புப் போட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்பாக காலை 9.00 மணியளவில் கவனஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூரும் இந்நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நீண்ட நாட்களாக தேடும் அவர்களின் உறவுகளினால் கவனஈர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியுள்ளனர். தூர இடங்களிலிருந்து பேரூந்துக்களில் வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தியுள்ளனர். சுpலரிடம் உங்கள் உறவுகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறி விரட்டியுள்ளனர்.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகம், கிருஸ்த்தவ மதகுருமார்களின் தலையிட்டு, இவ்வாறான நிகழ்வுகள் வருடாவருடம் எங்களால் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என தெரிவித்த போது, சுகாதார அதிகாரின் அனுமதி தேவை என பொலிஸார் கூறியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதி பெறப்பட்டதும் பொலிஸார் தமது ஆடாவடிகளை கைவிட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எமது உறவுகள் எங்ககே? உறவுகளைத் தேடும் நாம் பயங்கரவாதிகளா?, எங்களை அச்சுறுத்தாதே? , மனித உரிமை எமக்கு இல்லையா? எமது உறவு எமக்கு வேண்டும், சர்வதேசமே மனித உரிமை பேச்சலவில்தானா? நீதி கேட்டும் நாங்கள் அப்பாவில் தீவிரவாதியாக்காதே? ஏம் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கு வழங்கும் கோரிக்கை எல்லோர் மத்தியிலும் வாசிக்கப்பட்டதுடன், ஐ.நாவிடம் வழங்குவதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஒரு தயார் மட்டக்களப்பு மாவட்ட குருமுதல்வர் ஏ.ஜீவதாசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனஈர்ப்புப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரிநநேந்திரன், ஞா.ஸ்ரீநேசன,; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், கிருஸ்த்தவர் மதகுருமார்கள், சிவில் சமூகத்தவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சாதாரண உடையில் வருகை தந்த இராணுவ, பொலிஸ், தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒலிப்பதிவு செய்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியவர்களின் உரையாடல்களையும் பதிவு செய்தனர். அத்துடன், ஊடகவிலாளர்கள் தமது கடமைகளை செய்து கொண்டிருக்கும் போது சில புலனாய்வாளர்கள் பின்பக்கமாக வந்து நின்று ஒலிப்பதிவுகளையும் பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply