யாழ்.துன்னாலை பகுதியில் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துன்னாலையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி சென்ற போதே வீதியில் தேங்கி இருந்த வெள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply