யாழ்ப்பாணம் – வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின்  ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எல்.இளங்கோவன்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மருதனார்மடம் கொரோனா தொற்றுத் கொத்தணியின் முதலாவது நபரின் மகளுக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply