யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் விழுந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அராலி கிழக்கைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான மதுசன் பிரபாகினி (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி அவர், வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது மயங்கிச் விழுந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 7 நாட்களின் பின்னர் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னேடுத்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.