இலங்கையில் பிறந்த 7 வயதான சிறுவனொருவன், தனது தாய் மொழியை விடவும் வேறு மொழிகளை பேச ஆரம்பித்துள்ளமை தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெயங்கொட – நைவல பகுதியைச் சேர்ந்த சிறுவன் சேனுர வீரசிங்க, திடீரென ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேச ஆரம்பித்துள்ளார்.

தந்தை, வாகன இயந்திர திருத்த பணிகளை செய்யும் ஒரு வேலையை செய்து வருகின்றார்.

முழு சிங்கள மொழி சூழலில் வாழ்ந்த இந்த சிறுவன், திடீரென ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேச ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், விண்வெளி தொடர்பான விடயங்கள், இயற்கை தொடர்பான விடயங்கள், மிருகங்கள் குறித்து ஆழமாக இந்த சிறுவன் கதைக்க ஆரம்பித்துள்ளார்.

தான் முன் பிறவியில் விமான விபத்தொன்றில் உயிரிழந்ததாக அந்த சிறுவன் கூறியமை, மேலும் ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply