யூடியூப்பில் அதிகமானோர் பார்த்து சாதனையும் நிகழ்த்தியது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார்.
இவர் தற்போது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றிய சம்பவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு படத்தின் இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து முத்தகாட்சியில் நடிக்குமாறு நிர்ப்பந்தம் கொடுத்தார்.
உடனே அந்த படத்தின் கதாநாயகன் இயக்குனரை பார்த்து இந்த பிரச்சினையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதன்பிறகு இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை கேட்கவில்லை. மீ டூ என்னை தப்பிக்க வைத்தது” என்றார்.