டுவிட்டரில் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து ஒன்பது பேரை கொலை செய்த நபரொருவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் கொலையாளி எனப்படும் தகஹிரோ ஷிரைஷியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 2017ஆம் ஆண்டு இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 30 வயதான குறித்த நபர் கொலை செய்ததையும், கொலை செய்யப்பட்டவர்களின் உடற்பாகங்களை அகற்றியதையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்ட அனைவரும் இளம் பெண்கள் என்பதோடு, டுவிட்டரிலேயே அவர்களை இவர்கள் சந்தித்திருந்தார்.
தற்கொலை செய்யும் எண்ணமுடைய பெண்களை டுவிட்டரைப் பயன்படுத்தி, அவர்கள் இறப்பதற்கு உதவுவதற்காக கூறி அவர்களை இவர் வரவழைத்துள்ளார்.

