போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்வதற்கு மெட்ரோ ரயில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
தற்போது பிரபலங்களும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்த போது பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
அப்போது தான் விமான நிலையம் செல்ல மெட்ரோ மிகவும் உதவிகரமாக இருந்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல நடிகர் ரகுமான் சென்னை மெட்ரோ ரயில் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “ஒவ்வொரு முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும்  மெட்ரோ ரயிலையே பயன்படுத்துகிறேன்.
மெட்ரோ ரயில் ஃபெராரி காரை விட வேகமானது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சுத்தமாகவும் வசதியாகவும் மாசு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ள அவர், மெட்ரோ ரயில் சரியான நேரத்துக்கு வருவதாகவும்” பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Share.
Leave A Reply