நாளை முதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தடை விதிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
நாளை காலை 2மணிமுதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தரையிறங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.
புதியகொரோனா இலங்கையில் பரவுவதை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தரையிறங்குவதற்கான அனுமதி மறுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.