சிஎஸ்சி என்ற அமைப்பின் தலைவர் மஞ்சுள உக்வத்த என்பவர் 21ம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸின் மகளிர் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.
புதிதாக பிறந்த குழந்தைகளை வாங்கி அவற்றை தத்தெடுப்பவர்களிற்கு விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டார்.

கர்ப்பிணிப்பெண்களிற்கு இடமளித்து அவர்களை பராமரித்து அவர்கள் பிள்ளை பெற்ற பின்னர் அந்த பிள்ளைகளை பணத்திற்காகவும் ஏனைய நன்மைகளுக்காகவும் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அந்த நபர் கைதுசெய்யப்பட்டார் என கிராண்ட்பாசில் உள்ள பெண்கள் சிறுவர்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் 30 குழந்தைகளை விற்றுள்ளார் என்பதை பொலிஸ்பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.

மொரட்டுவையில் உக்வத்த இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறித்து தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைததுள்ளதாக ஒக்டோபர் 31ம் திகதியே தெரிவித்திருந்ததாக சிலோன் டுடே சுட்டிக்காட்டியுள்ளது

சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கை ஊடாகவே உக்வத்த இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கர்ப்பிணிப்பெண்கள் பிள்ளைகளை பிரசவிக்கும் வரையில் அவர்களிற்கு தனது அமைப்பு உதவி செய்வதாகவும் பின்னர் தத்துக்குடுப்பதற்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாக முகநூலில் தெரிவித்து வந்தார்.

அவரது முகநூல் பிரச்சாரத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.

குழந்தைகளை தத்துக்கொடுப்பதற்கு அவரது அமைப்பிற்கு அதிகாரிகள் எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்பதை நாங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.இலங்கையின் சட்டங்களின் படி தத்துக்கொடுப்பதற்கான அனுமதியை மாவட்ட நீதிமன்றங்கள் மாத்திரம் வழங்க முடியும் அதனை பல அரச அமைப்புகளின் விசாரiணையின் பின்னரே செய்ய முடியும்.

மேலும் குழந்தைகளை தத்துக்கொடுப்பதற்காக பணத்தையும் ஏனைய ஆதாயங்களையும் பெறுவது தடை செய்யப்ட்டுள்ளது.

உக்வத்தயின் நடவடிக்கைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர் குழந்தைகளை தத்தெடுத்தவர்களிடமிருந்து இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பணம் பெற்றார் என்ற முறைப்பாடுகள் காணப்பட்டதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு பணம் வழங்கி அந்த பெண்களின் குழந்தைகளை இவர் வாங்கி விற்றார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவையில் உள்ள சிபிடிசில்வா மாவத்தையிலும் தகமமாவத்தையிலும் இவர்கள் கர்ப்பிணிப்பெண்களை சந்தித்துள்ளார்.

12 பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஐந்து பெண்கள் ஏற்கனவே தங்கள் புதிதாக பிறந்த குழந்தைகளை பணத்திற்காக இவரிடம் விற்றிருந்தனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் மேலும் மூன்றுபெணகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்போது இந்த குற்றச்செயலில் மேலும் 12 பெண்களிற்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களை அடிப்படையாகவைத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்போது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பலர் குறித்த விபரங்கள் தெரியவரலாம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply