கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா,மொடேர்னா,பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு மருந்துகளில் இலங்கைக்கு பொருத்தமான மருந்தினை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.