வத்தேகம, பொல்கொல்ல பிரதேசத்தில் வதியும் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் காணாமல் போன நிலையில் அவரது எச்சங்களை பொலிஸார் இன்று(24) கண்டுபிடித்துள்ளனர்.

இப்பெண்(48 வயது) கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் இக்கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் வத்தேகம பொலிஸ் பிரிவில் பொல்கொல்ல, கொல்லகொடவில் வசித்து வந்த பிரியங்கா தமயந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் பலியானவரின் வீட்டிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் அவரது எச்சங்களை மறைத்துள்ளார்.

30 வயதுள்ள திருமணமாகாத சந்தேக நபர் குறித்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் வல்லுறவுக்கு முயன்றுள்ளார். இவரது முயற்சியை நிராகரித்த பெண்ணை சந்தேக நபர் தாக்கியுள்ளதாக அறியவருகிறது.

குறித்த பெண்ணின் கணவன் தனது மனைவி காணாமல் போனமை குறித்து பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையிலேயே அவரது எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply