கொழும்பு மாநகரசபை எல்லையில் நேற்று வரை கொரோனா தொற்றாளர்கள் 11ஆயிரத்து 226 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் 101 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

 

கொழும்பு மாநகர எல்லைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்மார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகர எல்லையில் நேற்று வரை கொரோனா தொற்றாளர்கள் 11ஆயிரத்தி 226பேர் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று 101 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் 58ஆயிரத்தி 35 பீ,சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

நேற்று மாத்திரம் 950 பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  150 ரெபிட் என்டிஜன் பரிசோதனை இடம்பெற்றது.

புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை மூலம் 89 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 20 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன்  ஆரம்பத்தை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் சில பிரதேசங்களில் இன்னும் அந்த நிலை தொடர்ந்து இருந்து வருகின்றது.

அதனால் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமும் தேவையற்ற பயணங்களை குறைத்துக்கொள்வதன் மூலமும் இந்த நிலையையை கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

Share.
Leave A Reply