பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் உருவாக்கும் அஸ்டிராஜெனேகா மருந்தினை இந்தியாவில் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்க அளவு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படலாம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிலோன்டுடே இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்ட காலநட்புறவினை கருத்தில்கொண்டு குறிப்பிடத்தக்க அளவு மருந்தினை இலவசமாக இலங்கைக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவு கொரோனா வைரஸ் மருந்தினை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார் எனவும் லலித்வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துவரும் கொரோனா வைரஸ் மருந்துகளை ஆராய்ந்துவருவதாகவும் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமீபத்தில் விஜயம் மேற்கொண்டு சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுவரும் கொரோனா மருந்துகள் குறித்து ஆராய்ந்துவருவதாக லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply