முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதியில் மண்டை ஓடு உட்பட மனித எச்சங்கள் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த மனித எச்சங்கள் ஆரம்பத்தில் கால்நடை வளர்ப்போரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதி கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட எச்சங்களில் மண்டை ஓடும் காணப்படுவதுடன் முல்லைத்தீவு நீதிவானின் அறிவுறுத்தலின் பேரில் சட்ட மருத்துவ அதிகாரியால் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதி பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Share.
Leave A Reply