மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (30.12.2020) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 34 ஆம் விடுதி பகுதியில் கொரோனா தொற்று மரணம் ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் கடமை புரிந்த வைத்தியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையின் 34 ஆம் விடுதி பகுதி முடப்பட்டுள்ளதுடன் கடமையில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 2 மரணங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.