மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்திலுள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கும்பல் அக்குடும்பத்தின் வீட்டுக் கதவை உடைத்து, அக்குடும்பத்தையே சராமாரியாக கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்கியுள்ளவர்கள், அக்கிராமத்திற்கு அயலிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து வந்த கும்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு(27.12.2020) 8 மணியளவில் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு குடும்பத்தினர் நித்திரைக்குச் சென்றுள்ள நிலையில், குறித்த கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து குடும்பத்தின் வீட்டு கதவை உடைத்து, அக்குடும்பத்திலிருந்த தந்தை தாய் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் ஆகிய நால்வரையும் மற்றும் அவர்களது அயல் வீட்டுக்கார ஆண் ஒருவரையும் தாக்கிவிட்டு மிகவும் சூட்சுமமான முறையில் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், அவர்களது அயல் வீட்டார் ஒருவருமாக 5 பேர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அனைவரையும் கிராமத்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லாவெளி பொலிசார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகயையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply