ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை போடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,
இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.