இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – ஶ்ரீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கையின் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எந்தவொரு நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு முப்படையினருக்கு இயலுமை உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

Share.
Leave A Reply