பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினாலும், கடந்த சில வாரங்களாக அவருக்கு பதில் சிம்பு களமிறங்கி உள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிந்துள்ளது.
அந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். தற்போது தமிழில் முதன்முறையாக ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் 5 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். அதில் அபிராமி வெளியேற்றப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினாலும், கடந்த சில வாரங்களாக அவருக்கு பதில் சிம்பு களமிறங்கி உள்ளார்.
அவர் தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். நடிகர் சிம்பு தொகுத்து வழங்கும் முறை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் அவர் வரும் வார இறுதி எபிசோடுகள் அதிக பார்வைகளைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய சிம்பு, அவர்களிடம் தனது பெற்றோர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அதில், எனக்கு கிடைத்த மாதிரி ஒரு தாய், தகப்பன் வந்து அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களானு தெரியல.
இன்னைக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க, என்ன பார்க்குறீங்க, ரசிக்கிரீங்க அது எல்லாத்துக்குமே காரணம் அவர்கள் தான்.
என்னைத் தட்டிக்கொடுத்து இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தது என் பெற்றோர் தான் என கூறுகையில் எமோஷனலாகி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார் சிம்பு. இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.